Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சிறுவர் உரிமைகளுக்கான தேசியக் கொள்கையுடன் ஜனாதிபதி செயலணி! -சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஜூலை 12, 2024 • 7:00 AM

சிறுவர் உரிமைகளுக்கான தேசியக் கொள்கையுடன் ஜனாதிபதி செயலணி! -சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • UNICEF நம்பிக்கை கொள்ளும் வகையிலான எமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவர்களிடம் முன்வைத்தோம்.
  • பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 308 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மத்திய கொழும்பு, மகா போதி வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 11 ஆம் திகதி இடம்பெற்றது.
  • நாடு முழுவதும் உள்ள 341 பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகங்களை மையமாக வைத்து, சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுப்போம்.
  • அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தம்மைச் சந்தித்தனர். UNICEF நம்பிக்கை கொள்ளும் வகையிலான எமது கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவர்களிடம் முன்வைத்தோம். பல வருடங்களாக தாம் பேசி நடைமுறைப்படுத்திய கொள்கைகளே இவை என யுனிசெப் பிரதிநிதிகளிடம்  தெரிவித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் சிறுவர்களின் உரிமைகளுக்கான தேசிய கொள்கையை உருவாக்குவோம். சிறுவர் உரிமைகள் குறித்து அவ்வப்போது பேசப்பட்டாலும் முறையான வேலைத்திட்டமொன்று எமது நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை.

சிறுவர்களின் ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூகக் கொள்கைகள் மூலம் உருவாக்கப்படும் பிரச்சினைகளுக்கு விரைவான பதில்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் வகையில், சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றினை தாபிப்போம். இதன் ஊடாக நாடு முழுவதும் சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தி பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

IMG 20240712 121558 800 x 533 pixel

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 308 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மத்திய கொழும்பு, மகா போதி வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 11 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 341 பிரதேச செயலகம் மற்றும் உப பிரதேச செயலகங்களை மையமாக வைத்து, சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுப்போம். சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாமனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றிலிருந்து சகலரையும் குறிப்பாக சிறுவர்களை விடுவிக்குமாறும், நாட்டின் எதிர்காலத்திற்கு பொறுப்பான சிறுவர்களை பாதுகாக்குமாறும் இலங்கை மது ஒழிப்போர் சங்கத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

IMG 20240712 121608 800 x 533 pixel

குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுடன் நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் நடந்து கொள்வது போலவே பிள்ளைகளும் நடந்து கொள்வார்கள். பொற்றோர்கள் செய்வதையே பிள்ளைகளும் பின் தொடர்வார்கள். எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றைய சமூகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பில்லாத நிலையை உணர்கின்றனர். சமூக பாதுகாப்பு இல்லாத நிலையையும் உணர்கின்றனர். இதன் காரணமாக சிறுவர்களை இலக்கு வைத்து சமூக பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுப்பட வேண்டிய தேவைப்பாடு இங்கு காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதுதான் முறைமையில் மாற்றம் என்பது, வழமையான சட்டகத்தை விட்டு வெளியே வந்து, புதிய வழிமுறைகள் மூலம் நாட்டிற்கு நன்மை பயக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளே பயனடைந்து வருகின்றனர்.  கல்விக் கொள்கையை தேசியக் கொள்கையாக்கி, தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் முதலம்சமாக மாற்றுவோம். இதன் கீழ் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...