Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கடமையின்போது துப்பாக்கியையும் தோட்டாக்களையும் போட்டு விட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்!

T

The Leader Desk

ஜூலை 11, 2024 • 3:58 PM

கடமையின்போது துப்பாக்கியையும் தோட்டாக்களையும் போட்டு விட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கணக்காய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான கணக்காய்வாளர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
  • மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
  • கடந்த 9 ஆம் திகதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள குறித்த கணக்காய்வு அதிகாரியின் வீட்டின் பாதுகாப்புக்காக இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நியமிக்கப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:

கணக்காய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான கணக்காய்வாளர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் குறித்த சார்ஜன்டை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
 
கடந்த 9 ஆம் திகதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள குறித்த கணக்காய்வு அதிகாரியின் வீட்டின் பாதுகாப்புக்காக இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இன்று இரவு 9.30 மணியளவில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கணக்காய்வாளர் வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட போது பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் மகசீன் என்பனவற்றை அவருக்கு வழங்கப்பட்ட   முன் அறையில் காணப்பட்ட  நாற்காலியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
 
இதனையடுத்தே சம்பந்தப்பட்ட  பொலிஸ் கான்ஸ்டபிள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடமையின்போது துப்பாக்கியையும் தோட்டாக்களையும் போட்டு விட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்! | Tamil Leader | We Lead the Nation