Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு!

T

The Leader Desk

ஜூலை 11, 2024 • 1:53 PM

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆளுனர் நஸீர் அஹமட் பங்கேற்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்னே, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
எழுத்து அளவு:

குழுக்கூட்டம் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்  தலைமையில் (08) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதில் புத்தளம் மாவட்டத்தின் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, கல்வி முன்னேற்றம், விளையாட்டு அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி, சுகாதாரம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
 
எதிர்வரும் காலங்களில் புத்தளம் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாகவும் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும், அதன் ஊடாக மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் துரித கதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தனது நோக்கம் என்றும் ஆளுனர் நஸீர் அஹமட்  இதன்போது சுட்டிக் காட்டினார். 
 
IMG 20240711 191822 800 x 533 pixel
 
புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் காட்டிவரும் கூடுதல் கரிசனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.
 
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்னே, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...