Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனாதிபதி ரணில் ஒரு சந்தர்ப்பவாதி என்கிறார் முஜிபுர் ரஹ்மான்! (வீடியோ)

T

The Leader Desk

ஜூலை 9, 2024 • 11:48 PM

ஜனாதிபதி ரணில் ஒரு சந்தர்ப்பவாதி என்கிறார் முஜிபுர் ரஹ்மான்! (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
  • படகு எந்தப் பக்கம் கவிழ்ந்தாலும் அதில் ஏறி வெளியேறவே ஜனாதிபதி முயற்சிக்கிறார். ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
  • ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதாகவும் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
தேர்தல் ஒத்திவைப்பு பற்றி பேசப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பில் வியாக்கியானம் கோரி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, இது 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்' எனவும் அவர் விவரித்தார்.
 
இந்தச் சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த ஜனாதிபதி முயற்சித்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
படகு எந்தப் பக்கம் கவிழ்ந்தாலும் அதில் ஏறி வெளியேறவே ஜனாதிபதி முயற்சிக்கிறார். 
 
ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
 
தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற விவாதம் நடந்தபோது, ​​அதன் தொடர்ச்சியாக இந்த மனு நீதிமன்றத்துக்கு வந்தது.
 
ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
 
ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
"வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை நம்பவைக்கும் ஒரு பெரிய நடவடிக்கை நடக்கிறது என்றும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி ரணில் ஒரு சந்தர்ப்பவாதி என்கிறார் முஜிபுர் ரஹ்மான்! (வீடியோ) | Tamil Leader | We Lead the Nation