Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த படுகொலை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தவை!

T

The Leader Desk

ஜூலை 9, 2024 • 10:23 AM

கிளப் வசந்த படுகொலை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தவை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (09) கருத்து வெளியிட்டார்.
  • அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் மையத்தில் நேற்றுக் (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உயிரிழந்துள்ளார்.
  • இவ்வாறான குற்றத்தை யாருடைய நலன்களை முன்னிறுத்தி செய்யப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (09) கருத்து வெளியிட்டார்.

அதுருகிரியில் உள்ள பச்சை குத்தும் மையத்தில் நேற்றுக் (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உயிரிழந்துள்ளார்.
 
துபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெற்றி் மற்றும்  கோவிலே சாந்தா ஆகிய இரு குற்றவாளிகள் நேரடியாகவே  திட்டமிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
 
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர்,
 
“தற்போதைய விசாரணைகளின்படி குற்றத்தை செய்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இவ்வாறான குற்றத்தை யாருடைய நலன்களை முன்னிறுத்தி செய்யப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய விசாரணைகளின்படி இந்தக் குற்றத்தை எந்தக் குற்றவாளிகள் வழிநடத்தினார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
 
"குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்."
 
"ஒரே நாளில் ஏழெட்டு பேர் சுட்டுக் கொல்லப்படும் நிலை இந்த நாட்டில் இருந்தது. இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒரு குற்றம் நடந்துள்ளது. சட்ட விரோதமான துப்பாக்கிகள் இன்னும் சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன."
 
எனவே, யுக்திய நடவடிக்கையிலும் சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...