Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை சமர்ப்பிக்காத எம்பிக்களின் பட்டியல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம்

T

The Leader Desk

ஜூலை 6, 2024 • 7:53 AM

சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை சமர்ப்பிக்காத எம்பிக்களின் பட்டியல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய 169 எம்.பிக்களில் 69 எம்.பி.க்கள் மாத்திரமே சொத்து பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
  • ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே சபாநாயகரிடம் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கும் அதேவேளை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சொத்துப் பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்கின்றனர்.
எழுத்து அளவு:

அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய 169 எம்.பிக்களில் 69 எம்.பி.க்கள் மாத்திரமே சொத்து பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம்  திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே சபாநாயகரிடம் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கும் அதேவேளை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சொத்துப் பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்கின்றனர்.
 
இந்நிலையில், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தை சமர்ப்பிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
 
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதற்கிடையில், இருபது எம்.பி.க்கள் மட்டுமே தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இணையதளத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை சமர்ப்பிக்காத எம்பிக்களின் பட்டியல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் | Tamil Leader | We Lead the Nation