Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கொம்பனிதெருவில் மாணவ, மாணவி மரணம்: பாகிஸ்தான் மாணவரை விசாரிக்கச் சென்ற பொலிஸார்!

T

The Leader Desk

ஜூலை 6, 2024 • 4:56 AM

கொம்பனிதெருவில் மாணவ, மாணவி மரணம்:  பாகிஸ்தான் மாணவரை விசாரிக்கச் சென்ற பொலிஸார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கையடக்கத் தொலைபேசி தரவுப் பதிவுகளைப் பெறுவதற்கு அனுமதி கோரிய கொம்பனிவீதி பொலிஸாரின் முறைப்பாட்டை கையாண்ட அதிகாரி, உயிரிழந்த மாணவனும் மாணவியும் அல்டேர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் அந்த நண்பர் பாகிஸ்தானியர் எனவும் தெரிவித்தார்.
  • பாகிஸ்தான் மாணவனின் வீட்டுக்கு பொலிஸார் சென்று விசாரணை நடத்தியபோதும் மாணவியின் தந்தை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி என்பதனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
  • இந்நிலையில் குறித்த நபருக்கு தூதுவர் சிறப்புரிமைகள் இருந்தால், உரிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது  மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவ, மாணவிகளின் கையடக்கத் தொலைபேசிகளின் சிம் அட்டைகள் தொடர்பான தொலைபேசி அழைப்புகளின்  தரவு பதிவுகளை கொம்பனிவீதி பொலிஸாரிடம் வழங்குமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர, சம்பந்தப்பட்ட தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உயிரிழந்த மாணவர் மற்றும் மாணவிகளின் கையடக்கத் தொலைபேசி தரவு பதிவேடுகளை பெற்றுக் கொள்வதற்காக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கி கோட்டை நீதிவான் கோசல சேனாதீர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
 
கையடக்கத் தொலைபேசி தரவுப் பதிவுகளைப் பெறுவதற்கு அனுமதி கோரிய கொம்பனிவீதி பொலிஸாரின் முறைப்பாட்டை கையாண்ட அதிகாரி, உயிரிழந்த மாணவனும் மாணவியும் அல்டேர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் அந்த நண்பர் பாகிஸ்தானியர் எனவும் தெரிவித்தார்.
 
பாகிஸ்தான் மாணவனின் வீட்டுக்கு பொலிஸார் சென்று விசாரணை நடத்தியபோதும் மாணவியின் தந்தை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி என்பதனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் குறித்த நபருக்கு தூதுவர் சிறப்புரிமைகள் இருந்தால், உரிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...