Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு விவகாரம்: எதிராக பல மனுக்கள்!

T

The Leader Desk

ஜூலை 5, 2024 • 12:34 PM

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு விவகாரம்: எதிராக பல மனுக்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் பல இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • இடைப்பட்ட மனுதாரர்கள், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3வது அத்தியாயத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2)வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
  • இதன்படி, அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைவதால் இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமாகும்.
எழுத்து அளவு:

தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்காமல்  தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் பல இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், டொக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர ஆகியோர் மனுக்களை முன்வைத்திருந்தனர்.
 
இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரும் இந்த இடைக்கால மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
 
இடைப்பட்ட மனுதாரர்கள், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3வது அத்தியாயத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2)வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
 
இதன்படி, அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைவதால் இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமாகும்.
 
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உரிய மனுவை சமர்ப்பிக்கும்போது தவறான உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த மனுதாரர் முயற்சித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 
 
மனுதாரர் தனது கோரிக்கையை நியாயப்படுத்த உதவும் எந்த உண்மைகளையும் முன்வைக்கத் தவறிவிட்டார் என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
இதனடிப்படையில், இந்த மனு தொடர்பாக தலையிட்டு உண்மைகளை முன்வைக்க தமக்கு அனுமதி வழங்குமாறும், தாங்கள் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டு உரிய மனுவை தள்ளுபடி செய்யுமாறும் இடையீடு செய்த மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு தொழில்முனைவோர் சி.டி. லேனவ இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு விவகாரம்: எதிராக பல மனுக்கள்! | Tamil Leader | We Lead the Nation