Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பால் புரையேறியதால் பாதிக்கப்பட்ட குழந்தையை அனுமதிக்க மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலை மறுப்பு: குழந்தை உயிரிழப்பு!

T

The Leader Desk

ஜூலை 4, 2024 • 2:40 PM

பால் புரையேறியதால் பாதிக்கப்பட்ட குழந்தையை அனுமதிக்க மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலை மறுப்பு: குழந்தை உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாதக் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
  • நேற்றுக் (03) காலை இந்தக குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டபோது பால் புரையேறியதால் பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை முச்சக்கரவண்டியில் மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
  • இதன்போது, குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவசர சிகிச்சைப் பிரிவு செயற்படவில்லை என்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
  • பின்னர் 10 கிலோமீற்றர் தூரம் சென்று குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் அதற்குள் சிசு இறந்துவிட்டதாகவும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக குழந்தையை கொண்டு வந்திருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

2 மாதக் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தையே இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் இதனால் மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களில் மூத்தவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
நேற்றுக் (03) காலை இந்தக குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டபோது  பால் புரையேறியதால் பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை முச்சக்கரவண்டியில்
மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
 
இதன்போது, குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவசர சிகிச்சைப் பிரிவு செயற்படவில்லை என்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
 
பின்னர் 10 கிலோமீற்றர் தூரம் சென்று குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் அதற்குள் சிசு இறந்துவிட்டதாகவும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக குழந்தையை கொண்டு வந்திருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மாத்தறை பொது மயானத்தில் நேற்று மாலை சிசுவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...