Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவுக்குமிடையிலான சந்திப்பு!

T

The Leader Desk

ஜூலை 4, 2024 • 12:04 PM

இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவுக்குமிடையிலான சந்திப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்பாட்டில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 2024 தொடர்பாக இந்திய அதிதிகளுடனான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் புதன்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவில் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
  • இந்தச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2024 தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு உதவிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய அதிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
  • குறித்த நிகழ்வானது ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்றது.
எழுத்து அளவு:
ஏற்பாட்டில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 2024  தொடர்பாக  இந்திய அதிதிகளுடனான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் புதன்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுவில் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
 
குறித்த நிகழ்வானது ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அதிதியாக இக்ரா ஜலால் மற்றும் பிரதம அதிதிகளாக இந்தியாவின் முன்னாள் மாநில சட்ட சபை உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மட் அபூபக்கர், இந்தியா தமிழ்நாடு சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.சாஹூல் ஹமீட், இந்தியா தமிழ்நாடு பகுதியை சேர்ந்த எம்.ரைய்னார் முஹம்மட் கடாபி ,முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
IMG 20240704 171655 800 x 533 pixel
 
இந்தச் சந்திப்பில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2024 தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு உதவிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய அதிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
 
IMG 20240704 171611 800 x 533 pixel
 
அத்துடன் மாநாடு தொடர்பாக இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய அதிதிகள் தெரிவித்துள்ளதுடன் மாநாடு வெற்றி பெற பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர்.
 
IMG 20240704 171548 800 x 533 pixel
 
2024 உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை முன்னிட்டு எமது மாநாட்டுக் குழுவின் அடுத்த கட்டம் பேராசிரியர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகவும் பின்னர் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உள்ளதாக   கலாநிதி ஏ.எல்.அன்சார் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
 
IMG 20240704 171512 800 x 533 pixel
 
இதன் போது இலங்கைத் தமிழ்எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கு  பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னத்துடன் கெளரவம் வழங்கப்பட்டது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...