Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கிறோம்! ஏறாவூரில் சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஜூலை 4, 2024 • 11:36 AM

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கிறோம்! ஏறாவூரில் சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
  • பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 284 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு, கல்குடா, ஏறாவூர் அல் அஸ்ஹர் உயர்தர பெண்கள் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
  • இந்த 2 நாடுகளும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்பு, ஒத்துழைப்புடன் போரின்றி இணைந்து வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது கொள்கை நிலைப்பாடாகும்.
எழுத்து அளவு:

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுக்குரிய நாடு வழங்கப்பட வேண்டும்.

பாலஸ்தீனத்தில் குழந்தைகள், அப்பாவி சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்களையும் படுகொலைகளையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம். இந்த வருட இறுதிக்குள் இரட்டைப் பேச்சும் இரட்டை நிலைப்பாடும் இல்லாமல் இலங்கை பலஸ்தீன மக்களுடன் ஒன்றாக நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 284 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மட்டக்களப்பு, கல்குடா, ஏறாவூர் அல் அஸ்ஹர் உயர்தர பெண்கள் பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக்  கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஒரு மனிதப் படுகொலை நிகழும்போது, ​​அந்த மனிதப் கொலைக்கு காரணமான நாட்டையும் அரசையும் பற்றி வெளிப்படையாக பேச பயப்படக்கூடாது. இதை வெளிப்படையாக பேச சிலர் பயப்படுகிறார்கள். இருந்தாலும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்தும், அவற்றைப் வழிநடத்தும் இஸ்ரேல் பிரதமர் குறித்தும் பெயர் சொல்லி பேசுவதற்கு சிலர் அஞ்சுகின்றனர். உண்மையைப் பேச தான் பயப்படவில்லை.

இந்த 2 நாடுகளும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்பு, ஒத்துழைப்புடன் போரின்றி இணைந்து வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியினது கொள்கை நிலைப்பாடாகும். எனவே, பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம், ஒரு நாடு உருவாகும்போது நிலம், மக்கள் மற்றும் அரசாங்கம் என்பன இருக்க வேண்டிய முக்கிய கூறுகளாகும். இந்தக் கூறுகள் இருந்தால், சுதந்திர நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும், மக்களைக் கொன்று குவித்து, மக்கள் இல்லாத பாலஸ்தீன நிலத்தைப் பெறவே இஸ்ரேல் முயற்சிக்கிறது. இந்த கொடூரமான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்பதால் இதனை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வருட இறுதிக்குள் இலங்கை பலஸ்தீனத்துடன் நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்மார்ட் கல்வியின் மூலம் பெற்ற அறிவில் ஒரு பெரும் மனித மூலதனமே உருவாக்கப்படுகிறது. ஒரு நாட்டின் மனித மூலதனத்தை யாராலும் திருட முடியாது. அந்த மனித மூலதனத்தைக் கொள்ளையடிக்கவும் முடியாது. வீடு, பணம், காணி, வாகனங்களை திருடலாம் என்றாலும், அறிவை யாராலும் திருட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...