Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ரணில் எம்முடன் இணைந்தால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் பரிசீலிக்கலாம்! -சாகர

T

The Leader Desk

ஜூலை 3, 2024 • 5:08 AM

ரணில் எம்முடன் இணைந்தால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் பரிசீலிக்கலாம்! -சாகர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிப்பாராயின் அவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
  • எமது கட்சி மொட்டு சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்." கேள்வி - ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?
  • பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிப்பாராயின் அவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை. எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைப்போம். எமது கட்சி மொட்டு சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்."

கேள்வி - ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் மொட்டு சின்னத்தில் முன்வைக்கப்படுவார். ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி எமது கட்சியின் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நடந்தால் நாங்கள் பரிசீலிப்போம்." என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...