Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

போருக்குப் பின்னரான இலங்கை குறித்த படம் நாளை கொழும்பில் திரையிடப்படுகிறது!

T

The Leader Desk

ஜூலை 2, 2024 • 6:15 AM

போருக்குப் பின்னரான இலங்கை குறித்த படம் நாளை கொழும்பில் திரையிடப்படுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பான "முற்றுப்புள்ளியா..?" (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் நாளை (03) திரையிடப்படுகிறது.
  • நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய இலங்கையில்தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் கதையை 2016ஆம் ஆண்டின் இத்திரைப்படமானது கூறுகிறது.
  • இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும் முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயலார்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • இடம்: கோதே நிறுவகம், 39, கிரெகரிஸ் வீதி, >கொழும்பு 07 திகதி: 03.07.2024 நேரம்: மாலை 6.00 மணி திரைப்படம் பற்றிய விபரங்கள் திரைப்படத்தின் பெயர்: "நாளைய தினத்தின் வடுக்கள்" அல்லது "முற்றுப்புள்ளியா..?" (தமிழி மொழியில்) இயக்குனர்: ஷெரின் சேவியர் தொகுப்பாளர்: பி.
எழுத்து அளவு:

இந்திய-இலங்கைக்  கூட்டுத் தயாரிப்பான "முற்றுப்புள்ளியா..?" (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் நாளை (03) திரையிடப்படுகிறது. திரையிடலைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் அனோமா ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும்.

நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய இலங்கையில்தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் கதையை 2016ஆம் ஆண்டின் இத்திரைப்படமானது கூறுகிறது.

அவர்களின் மௌனமானப் போராட்டங்கள், நிறைவேறாத ஆசைகள், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை என்பவற்றைப் பற்றி இத்திரைப்படம் எடுத்துரைக்கின்றது. ஏனையோரைப் போலா, கௌரவம், நீதி மற்றும் சமாதானத்திற்காக ஏங்கும் தமிழர்களின் கதையைச் கூறுகின்றது.

இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும் முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயலார்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை  அடிப்படையாகக் கொண்டது.

இத்திரைப்படமானது அவர்களின் ஆறாமல் இருக்கும் காயங்கள், புறக்கணிக்க கடினமான வடுக்கள் , வலி மற்றும் எதிர்பார்ப்பின்  உணர்ச்சிகள் போன்ற வேதனை மற்றும் துன்பகரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறது.

இழப்பு, துரோகம் மற்றும் போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கும் மற்றும்  கவனத்தைப் பற்றிக்கொள்ளும்  இக் கதை ஊக்கமளிப்பதோடு இறுதியில் செயற்பாட்டுக்கு அழைப்பு விடுக்க முயல்கிறது.

“தமிழர்களின் போராட்டத்தின் வரலாறு - புலிகளுடனான தமிழ் சமூகத்தின் உறவைப் போலவே - சிக்கலானது, ஆனால் கௌரவம் மற்றும் சமாதானத்துக்கானப் போராட்டம் இன்னும் நிறைவு பெறுவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வலி தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்போது , நீதிக்கான அழைப்புகள் கவனிக்கப்படாமல் இருப்பதனால், நாளைய தினத்தின்வடுக்கள் பெரிதாவதோடு ஆழமாகின்றன, ”என்கின்றார் சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளர்  ஷெரின் சேவியர்.

இடம்: கோதே நிறுவகம், 39, கிரெகரிஸ் வீதி, >கொழும்பு 07

திகதி: 03.07.2024
நேரம்: மாலை 6.00 மணி

திரைப்படம் பற்றிய விபரங்கள்

திரைப்படத்தின் பெயர்: "நாளைய தினத்தின் வடுக்கள்" அல்லது  "முற்றுப்புள்ளியா..?"  (தமிழி மொழியில்)

இயக்குனர்:      ஷெரின் சேவியர்

தொகுப்பாளர்: பி. லெனின்

திரைப்படக் கலை: ரவி வர்மன் நீலமேகம்

இசை: சுரேன் விகாஷ்

நடிகர்கள்: அன்னபூரணி, ஹாரிஸ் மூசா, அஜித் தினகரலால், சாம்பவி

வகைப்பாடு: அரசியல் நாடகம்

தயாரிக்கப்பட்ட ஆண்டு: 2014-2016, 2016 இல் வெளியிடப்பட்டது

படத்தின் கால அளவு: 01:39:58:04

யூடியூப் மாதிரி விளம்பரத் திரைப்பட இணைப்பு: https://thesocialarchitects.net/muttrupulliyaa/

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...