Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கஞ்சிபான இம்ரான் பிரான்ஸில் அரசியல் தஞ்சம்: தப்பிச் செல்ல உதவிய ரோ!

T

The Leader Desk

ஜூலை 2, 2024 • 5:20 AM

கஞ்சிபான இம்ரான் பிரான்ஸில் அரசியல் தஞ்சம்: தப்பிச் செல்ல உதவிய ரோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கும்பலைச் சேர்ந்த கஞ்சிபான இம்ரான் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கையின் தேசியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • இந்நிலையில், பெப்ரவரி 2019 இல், மாகந்துர மதூஷின் பிள்ளையின் பிறந்தநாள் விழாவின் போது 31 பாதாள உலக செயற்பாட்டாளர்களை துபாய் பொலிஸார் கைது செய்தனர்.
  • பின்னர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட காஞ்சிபான 2022ஆம் ஆண்டு மன்னார் சென்று மீன்பிடி படகில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
எழுத்து அளவு:

கும்பலைச் சேர்ந்த கஞ்சிபான இம்ரான் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கையின் தேசியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நாட்டின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் பாதுகாப்பைப் பெறுவது இதுவே முதல் தடவை என சம்பந்தப்பட்ட பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான பட்டியலில் இம்ரானின் பெயர் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காஞ்சிபான இம்ரானைக் கைது செய்வதற்காக பாதாள உலகத் தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவொன்று தேடும்போது, ​​அவர் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அங்கிருந்து தனது பாதாள உலக செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பெப்ரவரி 2019 இல், மாகந்துர மதூஷின் பிள்ளையின் பிறந்தநாள் விழாவின் போது 31 பாதாள உலக செயற்பாட்டாளர்களை துபாய் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களில்  கஞ்சிபான இம்ரானும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட காஞ்சிபான 2022ஆம் ஆண்டு மன்னார் சென்று மீன்பிடி படகில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.

இதற்கு இந்திய உளவுத்துறையின் ஆதரவு கிடைத்ததாக அந்நாட்களில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதன் பின்னர் அவர் பிரான்ஸுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...