Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை முகாமைத்துவ வர்த்தக பீட பீடாதிபதி, துறைத் தலைவர்கள் கடமையேற்பு!

T

The Leader Desk

ஜூலை 1, 2024 • 12:43 PM

தென்கிழக்குப் பல்கலை முகாமைத்துவ வர்த்தக பீட பீடாதிபதி, துறைத் தலைவர்கள் கடமையேற்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றிய கலாநிதி எஸ்.
  • சபீனாவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த பீடாதிபதி வெற்றிடத்துக்காக கடந்த 2024 .06.28 ஆம் திகதியன்று இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் பீடத்தின் உயர் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.
  • முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரும் இரண்டாவதாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.
எழுத்து அளவு:
முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றிய கலாநிதி எஸ். சபீனாவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த பீடாதிபதி வெற்றிடத்துக்காக கடந்த 2024 .06.28 ஆம் திகதியன்று இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் பீடத்தின் உயர் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
 
மேலும் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக  பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் முகாமைத்துவ துறையின் துறைத்தலைவராக பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா, நிதி மற்றும் கணக்கியல் துறையின் துறைத்தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என்.ஷபானா ஆகியோர் தங்கள் கடமைகளை உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் இடம்பெற்றது.
 
தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முன்னாள் மாணவர்களில் ஒருவர், பீடம் ஒன்றின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்படுவது இது நான்காவது சந்தர்ப்பமாகும்.
 
முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரும் இரண்டாவதாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மூன்றாவதாக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோரும் தெரிவாகியிருந்தனர். 
 
அதேவேளை இன்று துறைத்தலைவர்களாக கடமைகளை பெறுப்பேற்ற இருவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (Alumni) முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இங்கு கருத்துத் தெரிவித்த புதிய பீடாதிபதி பேராசிரியர் முஸ்தபா, தான் Infrastructure and Faculty Development, Student Engagement and Academic Enrichment, Faculty Support and Institutional Development என்ற மூன்று அம்சங்கள் கொண்ட அபிவிருத்தி திட்டங்களை மூன்று வருடத்தில் எட்டும் நோக்கில் குறித்த பணியை கையில் எடுத்துள்ளதாகவும் இதற்கு சம்மந்தப்பட்டவர்களின் ஆதரவு அவசியம் என்றும் தெரிவித்தார்.
 
இன்றைய கடமையேற்பின் மூலம் அடுத்த மூன்று வருட காலப் பகுதிக்கு முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் முஸ்தபாவும் பதவியேற்ற துறைத்தலைவர்களும்  பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக  கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் , இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.ஏ. முனாஸ், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலிம், நூலகர் எம்.எம்.றிபாவுடீன், பதில் பதிவாளர்   எம்.ஐ.நௌபர் உள்ளிட்டவர்களுடன் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர்கள் துறைத்தலைவர்கள் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து பங்கேற்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...