Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் நான் பணம் சம்பாதிக்கவில்லை! - மியுமி

T

The Leader Desk

ஜூலை 1, 2024 • 10:21 AM

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் நான் பணம் சம்பாதிக்கவில்லை! - மியுமி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வர்த்தகங்களில் ஈடுபட்டே பணம் சம்பாதிப்பதாகவும் போதைப்பொருள் வியாபாரம் செய்ததில்லை எனவும் பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்சமாலி இன்று (1) தெரிவித்தார்.
  • குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • ஒரு பெண் தொழில் நடத்தும்போது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக வருந்துவதாகவும், தான் நிரபராதி என்பதால் என்ன குற்றச்சாட்டுகள் கூறினாலும் பிரச்சினை இல்லை எனவும் பியுமி ஹன்சமாலி தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வர்த்தகங்களில் ஈடுபட்டே பணம் சம்பாதிப்பதாகவும் போதைப்பொருள் வியாபாரம் செய்ததில்லை எனவும் பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்சமாலி இன்று (1) தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
ஒரு பெண் தொழில் நடத்தும்போது இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக வருந்துவதாகவும், தான் நிரபராதி என்பதால் என்ன குற்றச்சாட்டுகள் கூறினாலும் பிரச்சினை இல்லை எனவும் பியுமி ஹன்சமாலி தெரிவித்தார்.
 
தன்னிடம் 20 வங்கிக் கணக்குகள் இல்லை என்றும் இருக்கும் ஒன்பது கணக்குகளும் வணிகம் தொடர்பானவை என்றும் அவர் கூறினார்.  
 
சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவினர் மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் நான் பணம் சம்பாதிக்கவில்லை! - மியுமி | Tamil Leader | We Lead the Nation