Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

மீனவர்களை விடுதலை செய்ய கோரி கடலில் இறங்கி தமிழக மீனவர்கள் போராட்டம்!

T

The Leader Desk

ஜூலை 1, 2024 • 7:36 AM

மீனவர்களை விடுதலை செய்ய கோரி கடலில் இறங்கி தமிழக மீனவர்கள் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளமையைக் கண்டித்து தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை(1) காலை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
  • பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட நாட்டு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
  • முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
எழுத்து அளவு:

4 படகுகளையும்  அதிலிருந்து 25 மீனவர்களையும்  இலங்கை கடற்படை கைது செய்துள்ளமையைக் கண்டித்து தமிழ்நாடு பாம்பன் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை(1) காலை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட நாட்டு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
 
IMG 20240701 125123 800 x 533 pixel
 
 நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்து இருதயராஜ், கிரேசியான், லயோனஸ் உள்ளிட்ட  25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
 
 முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்க உள்ளனர்.
 
IMG 20240701 125112 800 x 533 pixel
 
இந்நிலையில் பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமை யை   கண்டித்து   மீனவர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
 
IMG 20240701 125103 800 x 533 pixel
 
மீனவர்களின் இந்த சாலை மறியலால் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீனவர்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
 
 கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...