Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

மதுபோதையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் கடுமையான காயமடைந்து மரணம்!

T

The Leader Desk

ஜூன் 30, 2024 • 7:51 AM

மதுபோதையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர்  கடுமையான காயமடைந்து மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
  • இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை எனும் பகுதியில் (27) இடம்பெற்றுள்ளது.
  • நஸீர், பொலிஸ் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று மரண விசாரணைகளை தொடர்ந்தார்.
எழுத்து அளவு:

ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை எனும் பகுதியில் (27) இடம்பெற்றுள்ளது.

மது போதைக்கு அடிமையான நபர் ஒருவர் தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது வீட்டில் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி குத்தியபோது முழங்கைக்கும் புஜத்துக்கும் இடையிலான தசைப்பகுதியின் நாடி நரம்பு அறுந்து விரைவாக குருதி வெளியேறி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

IMG 20240630 130724 800 x 533 pixel

ஒரு குழந்தையின் தந்தையான இவர், போதைக்கு அடிமையாகி மனைவியுடன் முரண்படும் விடயமாக பல தடவைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினமும் போதையில் மனைவியை தாக்க முற்பட்ட போது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்ற ஆத்திரத்தில் குறித்த நபர் ஜன்னல் கண்ணாடியை உடைக்கும் போது  அது வெட்டியதால் இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று முறைப்பாட்டினை பதிவு செய்ததுடன், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், பொலிஸ் பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று மரண விசாரணைகளை தொடர்ந்தார்.

சம்பவம் இடம்பெற்ற அறை முழுவதும் இரத்த வெள்ளமாகவே காட்சியளித்தது.

பின்னர், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிவுற்றதும் சடலத்தை உவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அதிக குருதி வெளியேற்றமே மரணத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...