Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நாட்டுக்காக நான் செய்தவற்றை மக்கள் நினைவில் வைத்திருப்பர் என நினைப்பது நகைப்புக்குரியது! - சந்திரிகா

T

The Leader Desk

ஜூன் 30, 2024 • 6:17 AM

நாட்டுக்காக நான் செய்தவற்றை மக்கள் நினைவில் வைத்திருப்பர் என நினைப்பது நகைப்புக்குரியது! - சந்திரிகா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடயங்களை மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவு கூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
  • தனது 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தனது முகநூல் கணக்கில் அவர் பதிவில் கூறுகிறார்.
  • ஆனால் அன்று முழுவதும் எனக்கு கிடைத்த வாழ்த்துக்களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் என்னை நேசிக்கும் சிலரது நினைவுகள் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது.
எழுத்து அளவு:

விடயங்களை மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவு கூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

தனது 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தனது முகநூல் கணக்கில் அவர் பதிவில் கூறுகிறார்.

“இன்று நான் இந்த பூமியில் எழுபத்தொன்பதாவது வயதைக் கடந்து எண்பது வயதை எட்டியுள்ளேன்.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் பல விஷயங்களைச் செய்திருக்கிறேன்.

நான் பல விஷயங்களை மறந்திருக்கலாம். அவற்றில் சிலவற்றை நான் மறந்துவிட்டேன் என்றால், நாட்டு மக்கள் அவற்றை நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எண்ணுவது நகைப்புக்குரியது.

ஆனால் அன்று முழுவதும் எனக்கு கிடைத்த வாழ்த்துக்களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் என்னை நேசிக்கும் சிலரது நினைவுகள் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது.

 நான் செய்தது, சொன்னது எல்லாம் நினைவில் இல்லாவிட்டாலும், பலருக்கு இன்னும் நினைவில் இருக்கும் பொதுவான ஒன்று இருக்கிறது.

அதுவே இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் எனக்குள்ள உண்மையான அன்பு. அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

பல தசாப்தங்களாக பல விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் இருந்த போதிலும், நாட்டுக்கான எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வலிமையை உங்கள் அன்பே எனக்கு வழங்கியதாக இன்றும் நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாட்டுக்காக நான் செய்தவற்றை மக்கள் நினைவில் வைத்திருப்பர் என நினைப்பது நகைப்புக்குரியது! - சந்திரிகா | Tamil Leader | We Lead the Nation