Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஆளுநர்கள் சட்டவிரோத அரசியல் நியமனங்களை மேற்கொள்கின்றனர்! -சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஜூன் 30, 2024 • 5:47 AM

ஆளுநர்கள் சட்டவிரோத அரசியல் நியமனங்களை மேற்கொள்கின்றனர்! -சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படாமல் செயற்பட வேண்டும்.
  • பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 273 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, மஹர, வத்தளை ஹுணுபிட்டிய எந்தரமுல்ல புனித செபஸ்டியன் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 29 ஆம் திகதி இடம்பெற்றது.
  • தென் மாகாண ஆளுநர் சட்டவிரோதமான அரசியல் நியமனங்களை மேற்கொண்டு வருகிறார்.
எழுத்து அளவு:

தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படாமல் செயற்பட வேண்டும். தென் மாகாண ஆளுநர் சட்டவிரோதமான அரசியல் நியமனங்களை மேற்கொண்டு வருகிறார். தேர்தலை நடத்தாமல் தடம் புரளும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆளுநரின் கடிதத்தின் மூலம், தமது அடிவருடிகளை நியமிக்கும் விளையாட்டு தென் மாகாணத்தில் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 273 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான  ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, மஹர, வத்தளை ஹுணுபிட்டிய எந்தரமுல்ல புனித செபஸ்டியன் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது, பாடசாலை நடனக் குழுவிற்கு ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. 

இவ்வாறு தவறிழைக்க வேண்டாம் என ஆளுநர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வங்குரோத்தான ஒரு நாட்டிற்கு இதுபோன்ற வீணான திட்டங்களை செயல்படுத்த உரிமை இல்லை. பாடசாலைகளில் குறைபாடுகள் அதிகம் இருக்கத்தக்க, பணத்தைப் பயன்படுத்தி, தேர்தல் நடத்தப்படாதுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தமது சொந்த ஆதரவாளர்களுக்கு நியமணங்களை மேற்கொண்டு வரும் அநாகரீகமான செயற்திட்டத்தை நிறுத்துங்கள்.

இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆளுநர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் நீதிமன்றில் சாட்சியமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் ஆளுநரின் நற்பெயருக்குரிய கௌரவத்தைப் பேணிக் கொண்டு, குறைந்த வளங்களை பாடசாலை பிள்ளைகளின் நலனுக்காக பயன்படுத்துமாறு  எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...