அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் உண்மையற்றது எனவும் ரணவக்க கூறுகிறார்.
எக்காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிலோ அல்லது அரசாங்கத்திலோ இணையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


