நிலையில் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போன 25 வயதான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியான யுவதி தமர் அமிதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலில் பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சினால. இவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சல்லிக்கோவிலில் அவர் காணப்பட்டதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
"இந்த வெற்றிகரமான தேடுதல் நடவடிக்கையானது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிரூபிக்கிறது, இது ஒரு நேர்மறையான விளைவை உறுதி செய்கிறது." என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


