Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நண்பர்கள், நெருங்கியவர்கள் என்பதற்காக செய்திகளில் , எழுத்துகளில் நாம் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை! -தமிழன் ஆசிரியர் சிவா ராமசாமி

T

The Leader Desk

ஜூன் 29, 2024 • 9:16 AM

நண்பர்கள், நெருங்கியவர்கள் என்பதற்காக செய்திகளில் , எழுத்துகளில் நாம் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை! -தமிழன் ஆசிரியர் சிவா ராமசாமி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆவது அகவை நிறைவை முன்னிட்டு நேற்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அகவை நிறைவு விழா இனிதே நடந்தேறியது.
  • ஆனால் எமது செயற்பாடுகள் அந்த சந்தேகங்களை களைந்தன.தமிழ் , முஸ்லிம் சமூகங்களின் குரலாகவும் அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் சக்தியாகவும் நாங்கள் இருப்போம்.
  • இந்த விழா வெற்றிகரமாக நடைபெற்றமை தொடர்பில் தமிழன் பத்திரிகை ஆசிரியர் சிவா ராமசாமி தெரிவித்துள்ளதாவது, எமது அன்பான வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்திற்கு சமூகமளித்து , நிகழ்வின் இறுதிவரை நின்ற எனது அன்பிற்கும் நேசத்திற்கும் உரிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
எழுத்து அளவு:
4 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு நேற்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அகவை நிறைவு விழா இனிதே நடந்தேறியது.
 
இந்த விழா வெற்றிகரமாக நடைபெற்றமை தொடர்பில் தமிழன் பத்திரிகை ஆசிரியர் சிவா ராமசாமி  தெரிவித்துள்ளதாவது,
 
IMG 20240629 135905 800 x 533 pixel
 
எமது அன்பான வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்திற்கு சமூகமளித்து , நிகழ்வின் இறுதிவரை நின்ற எனது அன்பிற்கும் நேசத்திற்கும் உரிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி..
 
வாசகர்கள் , விளம்பரதாரர்கள் , நண்பர்கள் , இதர ஊடக உறவுகள் , கல்விமான்கள் , அரசியல்வாதிகள் என்று பலரும் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று வருகை தந்திருந்தனர்.
 
IMG 20240629 135840 800 x 533 pixel
 
'தமிழன்' பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது எங்களில் சந்தேகம் இருந்தது. ஆனால் எமது செயற்பாடுகள் அந்த சந்தேகங்களை களைந்தன.தமிழ் ,  முஸ்லிம் சமூகங்களின் குரலாகவும் அவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் சக்தியாகவும் நாங்கள் இருப்போம். நண்பர்கள் என்பதற்காகவோ நெருங்கியவர்கள் என்பதற்காகவோ செய்திகளில் ,எழுத்துகளில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை.  
 
IMG 20240629 135825 800 x 533 pixel
 
'தமிழன்'விருதுகளை பெற்றோருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதேசமயம் கல்விப்பணிக்கான எமது திட்டத்தில்  தமிழ் மொழியில் விசேட சித்தி பெற்ற சாதாரண தர வகுப்பு மாணவிக்கு மடிக்கணனி ஒன்றையும்  புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாவிடைப்பொதியையும் இலவசமாக வழங்கினோம். அவர்களுக்கும் வாழ்த்துகள் ..  பலரும் விடுத்த வேண்டுகோளின்படி ,அடுத்த வருடம் 'தமிழன்' விருதுகள்  விளையாட்டுத்துறை  உட்பட மேலும் சில துறைகளுக்கு விஸ்தரிக்கப்படும். 
 
IMG 20240629 135633 800 x 533 pixel
 
சமூக ஊடகத்திலும் , பத்திரிகையிலும் நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்த அனைவரிடமும்  தனியாக உரையாட முடியாமல்  போனாலும் என்னை மதித்து வருகை தந்த உங்களின் முகங்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். 
 
IMG 20240629 135802 800 x 533 pixel
 
இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒத்துழைத்த எமது முகாமைத்துவம் , எமது ஆசிரிய பீட உறுப்பினர்களின் அர்ப்பணிப்பை இங்கே பாராட்டியாக வேண்டும்.
 
IMG 20240629 135735 800 x 533 pixel
 
அதுமட்டுமல்ல எனக்காக தூர இடங்களில் இருந்து பயணித்து வந்த அன்பார்ந்த  உறவுகளை என்றும் மனதில் வைத்திருக்க கடப்பட்டுள்ளேன்.
 
IMG 20240629 135711 800 x 533 pixel
 
உங்கள் அனைவரின் ஒத்துழைப்பின்றி  இது சாத்தியமில்லை.. உங்களில் ஒருவனாக நான் இருக்க வேண்டுமென்பதையே இந்த நேசப்பிணைப்பு சுட்டி நிற்கின்றது.நிற்பேன்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...