Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு பொதுஜன பெரமுன மீண்டும் அறிவித்தது!

T

The Leader Desk

ஜூன் 29, 2024 • 6:01 AM

ஜனாதிபதி ரணிலுக்கு பொதுஜன பெரமுன மீண்டும் அறிவித்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மீண்டும் அறிவித்திருந்தது.
  • இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலருடன் கடந்த வாரம் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
  • அவ்வாறு தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படுவார் என்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மீண்டும் அறிவித்திருந்தது.

அவ்வாறு தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படுவார் என்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலருடன் கடந்த வாரம் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
 
பொதுஜன முன்னணியில் இருந்து தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு அந்த கட்சியின் தலைமைக்கு அடிமட்ட மட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
 
இதேவேளை, ஆரம்பம் முதலே அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று சேர்வதை மேலும் தாமதப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...