Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அரச நிறைவேற்று தர சேவை உத்தியோகத்தர்களின் விசேட கொடுப்பனவு அதிகரிக்கிறது!

T

The Leader Desk

ஜூன் 29, 2024 • 5:09 AM

அரச நிறைவேற்று தர  சேவை  உத்தியோகத்தர்களின் விசேட கொடுப்பனவு அதிகரிக்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிறைவேற்று தர உத்தியோகத்தர்களை பாதித்துள்ள தொழில்சார் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினாலேயே இது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

சேவையில் உள்ள  உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவை ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் சேவைக்காலத்தின் அடிப்படையில் 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் அனைத்து அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பொதுவான சம்பள கட்டமைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிறைவேற்று  தர உத்தியோகத்தர்களை பாதித்துள்ள தொழில்சார் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினாலேயே இது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
 
பிரதமரின் செயலாளர் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிதி அமைச்சின் செயலாளர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர்
 
இந்தக் குழுவின் அறிக்கை பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...