Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அநுரகுமார தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர்! - பிள்ளையான்

T

The Leader Desk

ஜூன் 28, 2024 • 8:43 AM

அநுரகுமார தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர்! - பிள்ளையான்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஜே.வி.பி ஆயுதங்களை கேட்டார்கள் ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தெரிவித்தார்.
  • மட்டக்களப்பில் இன்று ( 29) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறினார்.
  • ஆனால் நாங்கள் அதனைக் கொடுக்கவில்லை. பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்றது யார்?
எழுத்து அளவு:

ஜே.வி.பி கட்சியினரே. பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஜே.வி.பி ஆயுதங்களை கேட்டார்கள் ஆனால் நாங்கள் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ( 29) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுர குமார திசநாயக்க தெரிவித்திருந்தார். அநுர குமார திசநாயக்க தரப்பினரே எங்களுக்கு முதல் முறையாக ஆயுதங்களை வழங்கினர். அதன் பின்னர் மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள்.
 
ஆனால் நாங்கள் அதனைக் கொடுக்கவில்லை.  பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்றது யார்?
 
எனவே, ஜனநாயகத்தை பற்றி பேசுவதாக இருந்தால் அநுரகுமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராகப் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகிறேன். அவர்கள்தான் ஒரு பிரபல்யமான ஆயுதக் குழு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான்.
 
பின்னர் அதனைக் கைமாறியதும் அவர்கள்தான் என்றும் பிள்ளையான் சாடினார். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுர குமார திசநாயக்காவுக்கு தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...