Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பிரதேச செயலக கட்டடத்தை தாக்கிச் சேதப்படுத்திய காட்டு யானை!

T

The Leader Desk

ஜூன் 28, 2024 • 8:22 AM

பிரதேச செயலக கட்டடத்தை தாக்கிச் சேதப்படுத்திய காட்டு யானை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அருகில் உள்ள கடையையும் சேதப்படுத்தியுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • தற்போது மஹகும்புக்கடை சிறு வனப் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் தங்கும் பழக்கம் உள்ளதாகவும் பலா, மாம்பழங்களின் விளைச்சல் காலம் காரணமாக கிராமங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
  • எவ்வாறாயினும், இன்று (28) அதிகாலை காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்ததாகவும் அந்த யானை கடை ஒன்றைத் தாக்கிய போது, ​​பிரதேசவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அருகில் உள்ள கடையையும் சேதப்படுத்தியுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹகும்புக்கடவல பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறி நுழையும் காட்டு யானைக் கூட்டத்தினால் விவசாயப் பயிர்கள் நாசப்படுத்தப்படுவதுடன் தமது  இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த யானைக் கூட்டங்கள் வல்பாலுவ தேக்குமரக் காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தங்கி கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
தற்போது மஹகும்புக்கடை சிறு வனப் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் தங்கும் பழக்கம் உள்ளதாகவும் பலா, மாம்பழங்களின் விளைச்சல் காலம்  காரணமாக கிராமங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
எவ்வாறாயினும், இன்று (28) அதிகாலை காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்ததாகவும் அந்த யானை கடை ஒன்றைத் தாக்கிய போது, ​​பிரதேசவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் புதிதாக திறக்கப்பட்ட கட்டிடம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்ட அதேவேளை  கடை ஒன்றும் தாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...