Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஜனாதிபதி ஆட்சியையோ அரசியல் சாசனத்தையோ நிறுத்தி வைப்பது நோக்கம் அல்ல! – உயர் நீதிமன்றம்

T

The Leader Desk

ஜூன் 28, 2024 • 5:53 AM

ஜனாதிபதி ஆட்சியையோ அரசியல் சாசனத்தையோ நிறுத்தி வைப்பது நோக்கம் அல்ல! – உயர் நீதிமன்றம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சாசனத்தையோ நிறுத்தி வைப்பது தமது நோக்கம் அல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் நேற்று (27) இவ்வாறு தெரிவித்தனர்.
  • இந்த மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குறித்த உத்தரவை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
  • விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
எழுத்து அளவு:

சாசனத்தையோ நிறுத்தி வைப்பது தமது நோக்கம் அல்ல என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆகியோர் உயர்  நீதிமன்றத்தில் நேற்று (27) இவ்வாறு தெரிவித்தனர்.
 
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ள மனுவில் தலையிட அனுமதி கோரி பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
 
இந்த மனுக்கள் நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ்  முன்னிலையில் அழைக்கப்பட்டது.
 
மேலும், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை கவனமாக பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
 
தம்பர அமில தேரர் மற்றும் பேராசிரியர் மாஹிம் மெண்டிஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
 
இந்த மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குறித்த உத்தரவை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
 
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா, இந்த மனுக்களை விரைவாக விசாரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்றார்.
 
விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
 
மனுக்கள் மீதான விசாரணைக்கு திகதியை நிர்ணயித்த நீதிமன்றம், மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை, மறுப்பு மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டது.
 
பிரதம நீதியரசர் தவிர்ந்த ஏனைய நீதிபதிகளின் பதவிகளுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதைத் தடுத்து ஜனாதிபதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்த இடைக்கால உத்தரவின் மூலம் நிறைவேற்று அதிகாரங்களில் உயர் நீதிமன்றம் தலையிடுவதாக பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக அமைச்சர்களான விஜயதாச ராஜபக்க்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் நீதிபதிகள் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, இந்த மனு மீதான விசாரணையில் தலையிட அனுமதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.
 
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய மற்றும் டிலான் பிலிப் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
 
அரசியல் நிர்ணய சபையின் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம். ஏ. சுமந்திரன், கனக ஈஸ்வரன் ஆகியோர் தோன்றினர்.
 
சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா ஆஜரானார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...