Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

எனசல்கொல்ல மத்திய கல்லூரி கல்வி அபிவிருத்தி செயலக அங்குரார்ப்பண வைபவம்!

T

The Leader Desk

ஜூன் 25, 2024 • 6:29 PM

எனசல்கொல்ல மத்திய கல்லூரி கல்வி அபிவிருத்தி செயலக அங்குரார்ப்பண வைபவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வித்துபதீப மத்தியக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகமும் அதிபர் காரியாலயமும் நாளை 27ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.
  • கல்லூரியின் 75ஆவது வருட நிறைவு பவள விழா நினைவாக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரபல தொழிலதிபர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி.
  • நயீமுல்லாஹ் (SLPS – 1, B.Ed Hons) தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஹாஜியானி நாஹுர் உம்மா காதர் ஜே.பி., கிளையின் செயலாளர் முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாஹுர் ரஹீம் ஜே.பி.
எழுத்து அளவு:

வித்துபதீப மத்தியக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி செயலகமும் அதிபர் காரியாலயமும் நாளை  27ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

கல்லூரியின் 75ஆவது வருட நிறைவு பவள விழா நினைவாக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த பிரபல தொழிலதிபர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீனின் பூரண நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி செயலகமும் அதிபர் காரியாலயமும் புனரமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். 
 
எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் கௌரவ அதிபர் அல்ஹாஜ் எம்.ஜீ.எம். நயீமுல்லாஹ் (SLPS – 1, B.Ed Hons) தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி கொழும்பு அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஹாஜியானி நாஹுர் உம்மா காதர் ஜே.பி., கிளையின் செயலாளர் முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாஹுர் ரஹீம் ஜே.பி. உட்பட கொழும்புக் கிளையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள செயலகப் பெயர்ப் பலகையை பிரதம அதிதியின் பாரியார் திருமதி ஹாஜியானி நூர் ஸஹ்ரியா பஹார்தீன் திரை நீக்கம் செய்து வைக்க உள்ளார். 
 
இந்த நிகழ்வுக்கான வரவேற்பு ஏற்பாடுகள் கல்லூரி மாணவர்களினால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
எஸ்.ஏ.எம். பவாஸ்
உப செயலாளர்
பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை
க/ எனசல்கொல்ல ம.க.
0771909968
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...