Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின மக்கள் பேரணி வெல்லவாயவில்!

T

The Leader Desk

ஜூன் 25, 2024 • 8:59 AM

சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின மக்கள் பேரணி வெல்லவாயவில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவினால் வெல்லவாய மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, “புதிய கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியின் வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தலைமையிலான புதிய கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் பொதுக்கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகர மையத்தில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

"நாட்டுக்கு வெற்றி - ஒன்றிணைந்து பயணிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவினால் வெல்லவாய மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, “புதிய கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியின் வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான எம்.பி.க்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணி தலைமையிலான ஏனைய கட்சிகள், பாரிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு சிவில் அமைப்புக்கள் இப்புதிய கூட்டணியை நோக்கி அணி திரளத் தயாராகி வருகின்றனர்.” என்றார்.
 
இந்த மக்கள் பேரணி நிகழ்வில், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சுசில் பிரேமஜயந்த, நளின் பெனாண்டோ, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட புதிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...