Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

போராட்டக்காரர்களின் முற்றுகையில் கல்முனை நகரப் பகுதி: பதற்றமான நிலைமை!

T

The Leader Desk

ஜூன் 24, 2024 • 10:13 AM

போராட்டக்காரர்களின் முற்றுகையில் கல்முனை நகரப் பகுதி: பதற்றமான நிலைமை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி இன்று (24) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது இதனால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பதற்ற நிலையும் தோன்றியது.
  • கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் அதற்கான உரிய தீர்வு கோரியும் தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
  • இதேவேளை 7 மணித்தியாலங்களாக கல்முனை நகர் போராட்டக்காரர் வசமிருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்றுக்கு அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன் அனைத்துப் பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன.
எழுத்து அளவு:
செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி இன்று (24)  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
 
இதனால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பதற்ற நிலையும் தோன்றியது.
 
அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில்  அதிகாரிகளை உள்நுழைய விடாமல் தடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
IMG 20240624 152326 800 x 533 pixel
 
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும்  அதற்கான உரிய தீர்வு கோரியும்  தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
 
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால்  வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்திருந்தனர்.
 
IMG 20240624 152318 800 x 533 pixel
 
இதேவேளை 7 மணித்தியாலங்களாக  கல்முனை நகர் போராட்டக்காரர் வசமிருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்றுக்கு அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன் அனைத்துப் பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டன.
 
அத்துடன் தமது   நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?  என்பது  உட படலான  பல கோஷத்துடன்  மக்கள் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...