Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கசிப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் கொடூரக் கொலை!

T

The Leader Desk

ஜூன் 24, 2024 • 3:36 AM

 கசிப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் கொடூரக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தகவல் வழங்கியமைக்காக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவரின் சடலத்தை மித்தெனிய பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
  • கொட்டபொல, கொடகதுருவெல, தலாவ, காரியமடித்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹெட்டிகே கீர்த்திரத்ன (44) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
  • இவர்கள் அங்கு சென்றபோது ஓரிடத்தில் காணப்பட்ட குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அந்த இடத்தை சோதனையிட்டபோது கொலை செய்யப்பட்வரின் சேர்டின் துண்டுகள் இருந்ததை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

தகவல் வழங்கியமைக்காக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவரின் சடலத்தை மித்தெனிய பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கொட்டபொல, கொடகதுருவெல, தலாவ, காரியமடித்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹெட்டிகே கீர்த்திரத்ன (44) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கசிப்புக் கடத்தல்காரரைக் கைது செய்துள்ளனர்

கொலை செய்யப்பட்டவர் மே 31ஆம் திகதி மாலை சூரியவெவ பகுதிக்கு செல்வதற்காக பஸ் வரும்வரை தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் நின்றுள்ளார். இதன் பின்னர் அவரது மனைவி அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அவர் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் அவர் சில நாட்கள் சென்றும் வீடு திரும்பாத நிலையில் அவரது மனைவி பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.



இதேவேளை, கொலை செய்யப்பட்ட தந்தையின் சகோதரரும் அவரது நண்பரும் தேங்காய் பறிப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றுள்ளனர்.



இவர்கள் அங்கு சென்றபோது ஓரிடத்தில் காணப்பட்ட குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அந்த இடத்தை சோதனையிட்டபோது கொலை செய்யப்பட்வரின் சேர்டின் துண்டுகள் இருந்ததை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதனையடுத்து வலஸ்முல்ல நீதிவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை வரவழைத்த மித்தெனிய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் துணியில் சுற்றி, இரண்டடி குழி தேண்டப்பட்டு அதில்போட்டு மண்ணால் மூடப்படிருந்தது.


இறந்தவர் மனைவி மற்றும் குழந்தைகளால் சடலம் அடையாளம் காணப்பட்டது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...