Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஹக்கீம்: சிராஸுக்கும் முக்கிய பொறுப்பு!

T

The Leader Desk

ஜூன் 23, 2024 • 3:59 PM

முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஹக்கீம்: சிராஸுக்கும் முக்கிய பொறுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • கட்சியின் 31 ஆவது தேசிய பேராளர் மாநாடு ,காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நேற்று(22) நடைபெற்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவராக ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பதை கட்சியின் தவிசாளர் முழக்கம் ஏ.
  • பிரஸ்தாப பேராளர் மாநாடு மௌலவி காரி அப்துல் ஜப்பாரின் கிராஅத்துடன் ஆரம்பமானது. தக்பீர் முழக்கம், கரகோஷங்களுக்கு மத்தியில் தலைவர் ஹக்கீம் மாநாட்டுக்குத் தலைமை வகித்து கட்சியின் 33 பேர் அடங்கிய பதவிவழி உத்தியோகத்தர்களின் பெயர்களை அறிவித்தார்.
  • ஏ .காதிர், தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.
எழுத்து அளவு:

தேசிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 கட்சியின் 31 ஆவது தேசிய பேராளர் மாநாடு ,காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நேற்று(22) நடைபெற்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவராக ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பதை கட்சியின் தவிசாளர் முழக்கம் ஏ. எல் .அப்துல் மஜீத் மாநாட்டில் அறிவித்தார் .
 
பிரஸ்தாப பேராளர் மாநாடு மௌலவி காரி அப்துல் ஜப்பாரின் கிராஅத்துடன் ஆரம்பமானது. 
 
தக்பீர் முழக்கம், கரகோஷங்களுக்கு மத்தியில் தலைவர் ஹக்கீம் மாநாட்டுக்குத் தலைமை வகித்து கட்சியின் 33 பேர் அடங்கிய பதவிவழி உத்தியோகத்தர்களின் பெயர்களை அறிவித்தார்.
 
கட்சியின் பிரதித் தலைவர்களாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல் .ஏ எம் .ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான செய்யித் அலி சாஹிர் மௌலானா,சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கட்சியின் ஸ்தாபகப் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ். எம் ஏ .கபூர் ,யூ.ரீ.எம் அன்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 
 
தவிசாளராக முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத், செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதிச் செயலாளராக மன்சூர். ஏ .காதிர், தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், பொருளாளராக ரஹ்மத் மன்சூர் ,பிரதி அமைப்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை, தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக யூ.எல்.எம்.எல். முபீன் ,சர்வதேச நாடுகளுக்கான இணைப்பாளராக சிராஸ் மீரா சாஹிப், பிரதிப் பொருளாளராக ஏ.சீ.யஹ்யா கான் ஆகியோர் உட்பட 33 பேரையும் தலைவர் அறிவித்தபோது, அதனை தக்பீர் முழங்கி பேராளர்கள் அங்கீகரித்தனர்.
 
இந்த பேராளர் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டிருந்தார் .
 
இந்த மாநாட்டில் 1,500  பேராளர்கள் பங்குபற்றினர். அவர்களில் பலர் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...