Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகள்!

T

The Leader Desk

ஜூன் 22, 2024 • 8:06 AM

இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு விசா கோரி விண்ணப்பிக்கும் பல இலங்கையர்கள் விசா பெறுவதற்கு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
  • குறிப்பாக, அரசியல்வாதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது மிக அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு கனடா சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது திட்டமிட்டு வேண்டுமென்றே  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, பின்னர் அதனை ஒரு காரணமாக வைத்து அவர் எம்பி பதவியை இராஜினாமா செய்து விட்டு புகலிடம் கோரி வெளிநாடு சென்றமை போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு விசா கோரி விண்ணப்பிக்கும் பல இலங்கையர்கள் விசா பெறுவதற்கு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். 

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் போது கடுமையாக ஆராயுமாறு பல வெளிநாட்டு தூதரகங்கள் அந்த அலுவலகங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

குறிப்பாக, அரசியல்வாதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது மிக அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு கனடா சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...