பரவலாக்கப்பட்ட நிதி மற்றும் மதுபான உரிமம் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பல எம்பிக்கள் தங்கள் கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமல் அபிவிருத்தி நிதி மற்றும் மதுபான உரிமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இவ்வாறு நிதியைப் பெற்றுக் கொண்ட தமது கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கட்சித் தலைமைக்கு தெரியாமல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த நிலையில், அந்த எம்பிக்கள் எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்க்ஷமன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி என்ற ரீதியில் நிதி மதுபான அனுமதிப்பத்திரம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் போன்றவற்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றார்.
எமது கட்சி எம்பிக்கள் எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம்! ஹக்கீம்
T
The Leader Desk
ஜூன் 22, 2024 • 4:16 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பரவலாக்கப்பட்ட நிதி மற்றும் மதுபான உரிமம் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
- இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இவ்வாறு நிதியைப் பெற்றுக் கொண்ட தமது கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- பல எம்பிக்கள் தங்கள் கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமல் அபிவிருத்தி நிதி மற்றும் மதுபான உரிமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

