Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்!

T

The Leader Desk

ஜூன் 20, 2024 • 2:07 PM

இந்திய வெளிவிவகார அமைச்சர்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது.
  • இந்திய அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஸ்மார்ட் கல்வியையும் புதிய உலகிற்கு ஏற்ற கல்விக் கொள்கையையும் உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
  • இலங்கையின் வீடமைப்புத் திட்டங்களுக்கும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கும் இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பை என்றும் மறக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

எஸ்.ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (20)  கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அண்டைய நாடான இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவிகள் மற்றும் ஒத்தாசைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் நட்புறவு, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் அவ்வாறே பேணப்படும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார்.

இலங்கையின் வீடமைப்புத் திட்டங்களுக்கும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கும் இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பை என்றும் மறக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

IMG 20240620 192718 800 x 533 pixel

இந்திய அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஸ்மார்ட் கல்வியையும் புதிய உலகிற்கு ஏற்ற கல்விக் கொள்கையையும் உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், மீண்டும் ஒருமுறை இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவைப் பேணத் தயாராக இருப்பதாகவும், நட்பை மேலும் வளர்த்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 

இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும்  பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், எரான் விக்கிரமரத்ன, பழனி திகாம்பரம், ரவூப் ஹகீம், நிரோஷன் பெரேரா மற்றும் வீ இராதாகிருஷ்ணன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து  கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...