வெளிநாட்டவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துவது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு கோரி புதிய மக்கள் முன்னணி நேற்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
குறிப்பாக இது நிதிக்குற்றம் என்பதால், இது குறித்து அண்மையில் இலங்கை மத்திய வங்கிக்கு எழுத்துமூல முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் காயத்ரி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான ஊக்குவிப்பு திட்டங்கள் தற்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் இவ்வேளையில் இது சமூகப் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இந்த வலையில் சிக்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விகிதமும் இதனால் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேற்குறிப்பிட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் இணைந்து நடவடிக்கை எடுத்து இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் மூலமான கடன் வழங்கல்: தற்கொலைக்கு இட்டுச் செல்லும் அபாயம்!
T
The Leader Desk
ஜூன் 20, 2024 • 10:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வெளிநாட்டவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துவது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு கோரி புதிய மக்கள் முன்னணி நேற்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
- குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இந்த வலையில் சிக்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விகிதமும் இதனால் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
- குறிப்பாக இது நிதிக்குற்றம் என்பதால், இது குறித்து அண்மையில் இலங்கை மத்திய வங்கிக்கு எழுத்துமூல முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் காயத்ரி சொய்சா தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

