Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

வீரமுனையில் நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு!

T

The Leader Desk

ஜூன் 20, 2024 • 6:15 AM

வீரமுனையில் நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.
  • மேற்குறித்த வழக்கு நேற்று (19) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் குறித்த வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
எழுத்து அளவு:

வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.


வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இனமுரண்பாட்டையும் இனவன்முறையையும் ஏற்படுத்தும் என சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.


IMG 20240620 113238 800 x 533 pixel

மேற்குறித்த வழக்கு நேற்று (19) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் குறித்த வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் இனமுரண்பாடுகள் ஏற்படும் இனக்கலவரம் ஏற்படும் என்ற வகையில் தடையுத்தரவை பொலிஸார் கோரியிருந்த போதிலும் அவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யாது இவ்வாறான கட்டளைகளை பெற்றிருப்பதானது அடிப்படையற்றது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஊடகங்களிடம் சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...