Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நெடுந்தீவில் இளைஞர் அடித்துக் கொலை!

T

The Leader Desk

ஜூன் 20, 2024 • 4:26 AM

நெடுந்தீவில் இளைஞர் அடித்துக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
  • கொலை செய்யப்பட்டவர் நெடுந்தீவு 7 வட்டாரத்தைச் சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் வயது 23 என்பவராவரார்.
  • சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

நெடுந்தீவு   ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை  இளைஞர் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இருவருக்கிடையே காணப்பட்ட பகை காரணமாக நேற்று (19) இரவு மது போதையில்  கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே  வாய்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அவர்களில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அடிகாயங்களுடன் இன்று அதிகாலை  அவரது சடலம் மீட்கப்பட்டு  நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் நெடுந்தீவு 7 வட்டாரத்தைச்  சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் வயது 23 என்பவராவரார்.

சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்டவரின் சடலம்  நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...