சட்டவிரோத மதுபானம் உள்ளதாகக் கூறப்படும் வீடு ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவைத் தாக்கிக் காயப்படுத்திய சந்தேகநபரை துப்பாக்கியால் சுட்டு அவரைக் கட்டுப்படுத்தி கைது செய்ததாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் சந்தேக நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸார் மீதொட்டமுல்ல வடுகொடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிடச் சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் சோதனைக்கு அந்த வீட்டில் வசிக்கும் சந்தேக நபர் பொலிஸாரை அனுமதிக்கவில்லை. இருப்பினும் பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்துபோது சந்தேக நபர் பொலிஸாரைத் தாக்கி காயப்படுத்தியதுடன், அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டதில் சந்தேக நபரின் வலது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
வெல்லம்பிட்டியில் துப்பாக்கிப் பிரயோகம்!
T
The Leader Desk
ஜூன் 20, 2024 • 4:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சட்டவிரோத மதுபான வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸார் மீதொட்டமுல்ல வடுகொடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிடச் சென்றுள்ளனர்.
- இருப்பினும் பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்துபோது சந்தேக நபர் பொலிஸாரைத் தாக்கி காயப்படுத்தியதுடன், அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இதன்போது பொலிஸாரின் சோதனைக்கு அந்த வீட்டில் வசிக்கும் சந்தேக நபர் பொலிஸாரை அனுமதிக்கவில்லை.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

