Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கெஹலிய மறைத்துள்ள வாகனங்களைத் தொடரும் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு!

T

The Leader Desk

ஜூன் 20, 2024 • 3:53 AM

கெஹலிய  மறைத்துள்ள  வாகனங்களைத் தொடரும் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்பட்ட பென்ஸ் கார் மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
  • அவற்றை மீள ஒப்படைக்குமாறு சுகாதார அமைச்சு தொடர்ந்து கோரிக்கை விடுத்ததை அடுத்து, அமைச்சருக்கு உத்தியோகபூர்வ வாகனங்களாக வழங்கப்பட்ட பென்ஸ் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
  • சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்கப்பட்ட இரண்டு அதிநவீன சொகுசு உத்தியோகபூர்வ வாகனங்கள் சுகாதார அமைச்சர் பதவியை இழந்ததன் பின்னர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சிவிலியன் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எழுத்து அளவு:

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஒப்படைக்கப்பட்ட பென்ஸ் கார் மற்றும் இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்கப்பட்ட இரண்டு அதிநவீன சொகுசு உத்தியோகபூர்வ வாகனங்கள் சுகாதார அமைச்சர் பதவியை இழந்ததன் பின்னர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சிவிலியன் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


2022 மே மாதம் முதல் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது அமைச்சர் மற்றும் ஊழியர்களுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட பல வாகனங்கள் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .

அவற்றை மீள ஒப்படைக்குமாறு சுகாதார அமைச்சு தொடர்ந்து கோரிக்கை விடுத்ததை அடுத்து, அமைச்சருக்கு உத்தியோகபூர்வ வாகனங்களாக வழங்கப்பட்ட பென்ஸ் மற்றும் இரண்டு சொகுசு கார்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த போதிலும், இரண்டு சொகுசு கார்களும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...