Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

மன உளைச்சலில் தமிழ் அரசியல் கைதிகள்! - செல்வராசா கஜேந்திரன்

T

The Leader Desk

ஜூன் 19, 2024 • 12:36 PM

மன உளைச்சலில் தமிழ் அரசியல் கைதிகள்! - செல்வராசா கஜேந்திரன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம்.
  • அந்தச் சட்டத்தின் கீழ் கைதாகி புதிய மெகசின் சிறைச்சாலையில் 15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில்,,, புதிய மெகசின் சிறைச்சாலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதியாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மொறிஸ் என அழைக்கப்படும் கிருபாகரன் உள்ளிட்ட அரசியல் கைதிகளை இன்று(19) புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினேன்.
  • சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அவர்கள் சிறைக் கூடங்களில் வாழ்கின்றபோதும் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அவர்கள் மீது புதிது புதிதாக வழக்குகள் தொடுத்து அவர்களை சிறைச்சாலைக்குள்ளேயே மரணிக்க செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
எழுத்து அளவு:
சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம். அந்தச் சட்டத்தின் கீழ் கைதாகி புதிய மெகசின் சிறைச்சாலையில்  15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
 
அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
புதிய மெகசின் சிறைச்சாலையில்  உள்ள அரசியல் கைதிகளை இன்று புதன் கிழமை(19) நேரில் சென்று சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
 
புதிய மெகசின் சிறைச்சாலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதியாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மொறிஸ் என அழைக்கப்படும்  கிருபாகரன் உள்ளிட்ட அரசியல் கைதிகளை
இன்று(19) புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினேன்.
 
குறித்த அரசியல் கைதிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
 
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அவர்கள் சிறைக் கூடங்களில் வாழ்கின்றபோதும் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அவர்கள் மீது புதிது புதிதாக வழக்குகள் தொடுத்து அவர்களை சிறைச்சாலைக்குள்ளேயே மரணிக்க செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசாங்கம்  செயற்பட்டு வருகிறது.
 
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம்.
 
அவ்வாறான ஒரு சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளபோதும் இன்று வரை குறித்த சட்டம் நீக்கப்படாமல் இந்த சட்டத்தின் கீழ் போலியான வழக்குகள் மீண்டும் மீண்டும் தொடரப்பட்டுவரும் நிலை காணப்படுகிறது.
 
கிருபாகரன் மீதும் கடந்த வாரம் புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் 19 வயதில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆயுட்தண்டனை வழங்கப்பட்டு சுமார் 2 ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்துள்ள நிலையிலும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
 
எனவே, இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...