நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளை கையடக்கத் தொலைபேசி மூலம் நுணுக்கமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டுள்ளது.
நீச்சல் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் மீது தொலைபேசி மூலம் நூதன பாலியல் வன்கொடுமை!
T
The Leader Desk
ஜூன் 19, 2024 • 3:19 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளை கையடக்கத் தொலைபேசி மூலம் நுணுக்கமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டுள்ளது.
- கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹொரணை பகுதியைச் சேர்ந்த சுபசிங்க இசுரு சம்பத் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
- நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பேரில் இலங்கை மின்சார சபையின் ஊழியரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹொரணை பகுதியைச் சேர்ந்த சுபசிங்க இசுரு சம்பத் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பேரில் இலங்கை மின்சார சபையின் ஊழியரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கடந்த 15ஆம் திகதி சுகததாச நீச்சல் தடாகத்தில் மேல்மாகாண நீச்சல் போட்டியொன்று இடம்பெற்றதுடன், சிறுமிகள் நீச்சல் உடை அணிந்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததை சந்தேகநபர் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கைத்தொலைபேசியை சோதனையிட்டபோது சிறுமிகளின் பல காணொளிகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

