11 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை பேஸ்புக் ஊடாக விளம்பரப்படுத்தி 1,75,000 ரூபாவுக்கு விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னணி தெரியாது குறைந்த விலைக்கு ஆட்டோவை பெற்ற அதிரடிப்படை வீரரின் நிலைமை!
T
The Leader Desk
ஜூன் 18, 2024 • 5:05 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை பேஸ்புக் ஊடாக விளம்பரப்படுத்தி 1,75,000 ரூபாவுக்கு விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:
இந்நிலையில், திருடப்பட்ட ஆட்டோவைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையின் ராஜகிரிய முகாமின் கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 16ஆம் திகதி ரத்கம காலி வீதியில் கம்மத்தகொட பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிளை நேற்று (17) முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளிடம் விசாரணை நடத்தியபோது, இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை பின்பற்றி 1,75,000 ரூபாவுக்கு ஆட்டோவை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

