Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

அவமானகரமான தோல்விக்கு தானும் அணியுமே பொறுப்பு! - வனிந்து

T

The Leader Desk

ஜூன் 17, 2024 • 9:09 AM

அவமானகரமான தோல்விக்கு தானும் அணியுமே பொறுப்பு! - வனிந்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முதல் சுற்றிலேயே வெளியேறியதன் காரணமாக அணித்தலைவராகவும், வீரராகவும் தாம் வருத்தமடைவதாக இலங்கை 20-20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
  • இலங்கை அணியின் குறைபாடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை என வனிந்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
  • உலகக்கிண்ண தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வனிந்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

முதல் சுற்றிலேயே வெளியேறியதன் காரணமாக அணித்தலைவராகவும், வீரராகவும் தாம் வருத்தமடைவதாக இலங்கை 20-20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

20-20 உலகக்கிண்ண தொடரில்நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வனிந்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் கருத்து தெரிவித்த அவர், அணியில் திறமையான பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் துடுப்பாட்டக்காரர்களின் பலவீனம் காரணமாக உலகக் கோப்பை போட்டியிலிருந்து முன்கூட்டியே வெளியேற நேரிட்டது.
 
இலங்கை அணியின் குறைபாடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை என வனிந்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
 
வனிந்து ஹசரங்க மேலும் கூறுகையில், இலங்கை அணியைச் சுற்றியுள்ள ரசிகர்களை கோபப்படுத்தும் நோக்கில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
 
எவ்வாறாயினும், போட்டிகளில் வென்றாலும் தோல்வியடைந்தாலும் பார்வையாளர்கள் இலங்கை அணியைச் சுற்றியே இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட இந்த அவமானகரமான தோல்விக்கு தானும் அணியும் பொறுப்பேற்போம் என வனிந்து தெரிவித்துள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...