ஒருவரிடம் இலஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் பொறியியலாளர் தன்னிடம் 4 இலட்சம் ரூபா இலஞ்சம் கோருவதாக – ஆக்கரைப்பற்றிலுள்ள கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய புதன்கிழமை (12), அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசன திணைக்களக் காரியாலயத்தில் வைத்து, நீர்ப்பாசன பொறியியலாளர் கூறியமைக்கு அமைவாக அவரின் வாகன சாரதியிடம் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதியாக 2 இலட்சம் ரூபாவை கனரக வாகனங்களின் உரிமையாளர் வழங்கியுள்ளார்.
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பொறியியலாளரையும் அவரின் சாரதியையும் கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (13) முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, அவர்களை விளக்கமறியவில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
வயல் வெளிகளிலிருந்து மண்ணை ஏற்றிக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கும் பொருட்டு, குறித்த கனரக வாகனங்களின் உரிமையாளரிடம் மேற்படி பொறியியலாளர் லஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
அக்கரைப்பற்றில் இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளரும் சாரதியும் கைது!
T
The Leader Desk
ஜூன் 16, 2024 • 6:42 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒருவரிடம் இலஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (13) முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, அவர்களை விளக்கமறியவில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
- இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பொறியியலாளரையும் அவரின் சாரதியையும் கைது செய்தனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

