Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்கிறார் நாமல்!

T

The Leader Desk

ஜூன் 15, 2024 • 10:21 AM

வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்கிறார் நாமல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வட.
  • மாகாணத்துக்குச் சென்று 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படும் என கூறியதை நான் பார்த்தேன்.
  • மஹிந்தவின் காலத்திலேயே புலிகளைத் தோற்கடித்து 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து அவர்கள் விரும்பும் முதலமைச்சர் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகளை நியமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • எனவே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் மாகாண சபை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் . 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தி வடக்கில் வாக்கு கேட்கவோ வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாடவோ வேண்டாம் என்றார்.
எழுத்து அளவு:

வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க  ஆகியோர் வட. மாகாணத்துக்குச் சென்று 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படும் என கூறியதை நான் பார்த்தேன்.

மஹிந்தவின் காலத்திலேயே புலிகளைத் தோற்கடித்து 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து அவர்கள் விரும்பும் முதலமைச்சர் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகளை நியமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட புலிகள் தடை செய்திருந்தனர் .மாகாணசபையல்ல தனி நாடு வேண்டும் என்றே கேட்டனர் . 

13ஆவது திருத்தம்ஏற்கனவே நடைமுறையில் உள்ளது வடக்கில் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் இலாபங்களுக்காக தேர்தலை வைத்துக் கொண்டு ஏனைய கட்சிகள் இவ்வாறு பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது . வடக்கின் அபிவிருத்தி பற்றி  இவர்கள் பேசவே இல்லை.

ஆனால், எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் வடக்கு வசந்தம், கிழக்கு உதயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனவே 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் மாகாண சபை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் . 

13ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தி  வடக்கில் வாக்கு கேட்கவோ வடக்கு மக்களின் உணர்வுகளுடன் விளையாடவோ வேண்டாம் என்றார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...