சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு ஒன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் குறித்த துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி அஹமட் லேனில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் இளம் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கிய பின் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
இச்சம்பவத்தில் சித்தீக் சிபானியா (32) என்பவரே காயமடைந்துள்ளார். இப்பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் ,குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.விக்களையும் சோதனை செய்து சந்தேக நபரை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை!
T
The Leader Desk
ஜூன் 15, 2024 • 4:00 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி அஹமட் லேனில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
- குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கிய பின் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
- இச்சம்பவத்தில் சித்தீக் சிபானியா (32) என்பவரே காயமடைந்துள்ளார். இப்பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் ,குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

