Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஊடகவியலாளரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கவே தாக்குதல்! கிளிநொச்சி ஊடக அமையம் கண்டனம்

T

The Leader Desk

ஜூன் 14, 2024 • 8:23 AM

ஊடகவியலாளரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கவே தாக்குதல்!  கிளிநொச்சி ஊடக  அமையம்  கண்டனம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனாலும் அவர்கள் இவற்றையெல்லாம் கடந்து தங்களது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
  • ஊடகத் தொழில் என்பது முக்கியமாக பிராந்திய செய்தியாளர்களின் பொருளாதார நிலைமை என்பது கவலைக்குரியது.
  • அவர்களுக்கு ஊடகத் தொழில் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மை சொற்பமானதே இந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாடுகள் மன்னிக்க முடியாதவை. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.
எழுத்து அளவு:

தம்பித்துரை பிரதீபனின் வீட்டின்  மீது  இன்று (13)  அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்  என்பது அவரது ஊடகப்பணியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி  அவரை அடிபணிய வைக்கும் நடவடிக்கையே எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம்  இந்தத் தாக்குதல் முயற்சிக்கு தனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிளிநொச்சி ஊடக அமையும் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  இலங்கையை பொறுத்தவரை ஊடவியலாளர்கள்  தங்களது கடமைகளின்போது    அதிகளவு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். 

குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்கின்ற  நெருக்கடிகள் என்பது மிக மோசமானதாக காணப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இவற்றையெல்லாம் கடந்து தங்களது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஊடகத் தொழில் என்பது முக்கியமாக பிராந்திய செய்தியாளர்களின் பொருளாதார நிலைமை என்பது கவலைக்குரியது. அவர்களுக்கு ஊடகத் தொழில் மூலம் கிடைக்கும்  பொருளாதார நன்மை  சொற்பமானதே இந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தி  அச்சுறுத்தும் செயற்பாடுகள்  மன்னிக்க முடியாதவை.   

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். எனத் தெரிவித்துள்ள கிளிநொ்சசி  ஊடக அமையம் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கை என்பது இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள்  இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்வதோடு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...