Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நாடாளுமன்றத்தில் அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்! குணதிலக எம்பி!

T

The Leader Desk

ஜூன் 14, 2024 • 5:42 AM

நாடாளுமன்றத்தில் அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்! குணதிலக எம்பி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், நாட்டின் முக்கிய நிர்வாக மையமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும் தெரிவித்தார்.
  • ஆளும் கட்சி எம்.பி குழுக் கூட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கம எம்.பி மற்றும் குணதிலக்க ராஜபக்க்ஷ எம்.பி.க்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்பட்டது.
  • ஜனாதிபதி செயலகத்தின் சிசிரிவி காட்சிகளை அவதானித்தால் இது தொடர்பான சம்பவத்தை தெளிவாக காண முடியும் என தெரிவித்த அவர், சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பான சம்பவத்தை பார்த்ததாக கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குப் பின்னர், தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட உறுப்பினர்  குணதிலக ராஜபக்க்ஷ கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், நாட்டின் முக்கிய நிர்வாக மையமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் சிசிரிவி காட்சிகளை அவதானித்தால் இது தொடர்பான சம்பவத்தை தெளிவாக காண முடியும் என தெரிவித்த அவர், சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரிடம் இது தொடர்பான சம்பவத்தை பார்த்ததாக கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆளும் கட்சி எம்.பி குழுக் கூட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கம எம்.பி மற்றும் குணதிலக்க ராஜபக்க்ஷ எம்.பி.க்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்பட்டது.

தாக்குதலின் பின்னர், குணதிலக்க ராஜபக்க்ஷ இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கால் முறிவு காரணமாக நான்கு மணிநேர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

படிக்கட்டில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று கூறிய குணதிலக்க ராஜபக்க்ஷ, சினிமாவில் வரும் காட்சியைப்போல தான் உதைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...